அரசியலில் பெண்களின் உழைப்பு, திறமை உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,பிரதமர் மோடி , குடியரசு தலைவர், தமிழக முதல்வர் முகஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியலில் பெண்களின் உழைப்பு, திறமை உரிய முறையில் அங்கீகரிக்கப் படுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரபரக்கப் போதும் 10 ஆம் தேதி..! – “விட்றா வண்டியை ..!”
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பெண்கள் ஏராளமான தடைகள், பிரச்சனைகளை தாண்டி சமூகத்தில் தனக்கான இடத்தை காலம் காலமாக உறுதி செய்ய முயற்சி செய்கின்றனர்; சமூகத்தின் நீட்சியாகத்தான் அரசியல் கட்சிகள் இருக்கின்றன;
சமூகத்தில் பெண்கள் குறித்து என்ன மனநிலை இருக்கிறதோ அதே மனநிலை அரசியலில் பிரதிபலிப்பதை பார்க்க முடிகிறது.
அரசியல் கட்சிகள் பெண்களின் பங்களிப்பு, பெயரளவில் இருக்கவே விரும்புகிறார்கள்; எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலை தான் என்று தெரிவித்தார்.மேலும் ,அரசியலில் பெண்களின் உழைப்பு, திறமை உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவதில்லை
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்ததன் மூலம் அரசியலில் பெண்கள் பங்களிப்பில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை தெரிவித்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1765986016379461705?s=20
ஒட்டுமொத்தமாக பார்த்தால் அரசியலில் பெண்களுக்கான இடம் என்பது அதிருப்திகரமாகத்தான் உள்ளது; அரசியலில் பெண்கள் பங்கை அதிகரிக்க பெண்ணியம் சார்ந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.
ஆண்கள் தலைமையேற்று நடத்தும் அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளில் இடம் இல்லை
பெண்களின் அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றின் மதிப்பு வீடு தொடங்கி அரசியல் வரை குறைவாகவே உள்ளது. பெண்களை உடல் சார்ந்தவர்களாக பார்க்கும் மனோபாவம்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.