Bank Account Frozen | காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலைவணங்காது என வங்கி முடக்கத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ” நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: Manipur violenc | ”மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..” 2 பேர் உயிரிழப்பு!
2018-19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக காங்கிரஸ் கட்சி சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் தற்போது 4 வருடங்கள் தாமதமாக வருமான வரித்துறை வங்கிக் கணக்குகளை முடக்கி ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித் துறை விதித்துள்ளது.
மேலும் வங்கிக் கணக்கு முடக்கி இருப்பதால் காங்கிரஸ் அலுவலகம் முழுமையாக முடங்கியுள்ளது.
இதனால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லைஎன்று தெரிவித்தார்.
ஒரே கட்சிதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளது.
இதையும் படிங்க: Delhi Farmers Protest | ”ராணுவ வீரர்களை போல..போராடும் விவசாயிகள்..” ராகுல் தாக்கு!
காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ரூ.25 கோடிக்கு நிதி அளித்துள்ளனர்.
மேலும் ரூ.14 லட்சம் நிதியை எம்.பிக்கள் கொடுத்துள்ளனர். மக்களின் 100 ரூபாய் நிதி இதில் உள்ளது.
பா.ஜ.கவை போல் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.6500 கோடி நிதிய காங்கிரஸ் வாங்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வங்கிக் கணக்குகள் முடக்கம்(Bank Account Frozen )தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1758471614583160866?s=20
மேலும் இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு ஆளும் கட்சியின் பிடியிலிருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.
வங்கி முடக்கத்தைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.