உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
10 திறமையான அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது .
அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 6 லீக் போட்டிகள் வெற்றிகரமான நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று 7 வது லீக் போட்டி நடைபெறுகிறது .
ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில், இங்கிலாந்து – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் . இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் போடும் முன் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது :
தரம்சாலா மைதானம் மோசமான நிலையில் உள்ளது. பீல்டிங் செய்யும்போது, வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் இதை காரணமாக கூறவில்லை. ஆனால், ஒரு அணியாக நாங்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு இது இடையூறாக உள்ளது என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தரம்சாலா மைதானம் குறித்து ஜோஸ் பட்லர் கூறிய கருத்து சர்ச்சை ஆகி வரும் நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .