உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .
13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இம்முறை இந்தியாவில் நடைபெறும் இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது .
அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த தொடரில் விடுமுறை நாளான இன்று நடைபெறும் 13 வது லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட உள்ளது . டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த உலககோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணியை ஆஃப்கானிஸ்தான் அணி எப்படி எதிர்கொள்ளப்போகிறது .அணியின் வியூகம் என்னவாக இருக்கும் என்பதை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.