நாடு முழுவதும் சிவப்பு வண்ண லிப்ஸ்டிக்கிற்கு வட கொரியா தடை விதித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் அனைவரும் வடகொரியா ஒரு சர்வாதிகார நாடு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை, வடகொரிய ஒரு ஜனநாயக நாடு. அங்கே ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடக்குமாம்.
அந்த தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிப்பார்களாம். ஆனால் இதில் ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட்! மேயர் தேர்தல் தொடங்கி உள்ளூர் சட்டசபைத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் ஒரு வேட்பாளர் மட்டுமே இருப்பார்.
மக்கள் நிச்சயம் அவருக்குத் தான் ஓட்டுப் போடவேண்டும். ஒருவேளை யாரவது ஒருவர் தேர்தலில் வாக்களிக்கத் தவறவிட்டால் அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டாம்.
மேலும் வடகொரியாவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. யார் என்ன தவறு செய்தாலும் அவர் உட்பட, அவருடன் சேர்த்து மூன்று தலைமுறைக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும்.
இதையும் படிங்க: குறிப்பிட்ட சில நிமிடங்கள் விண்வெளி மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் – நாசா
அதாவது அவர், அவரது பெற்றோர், அவரது தாத்தா பாட்டி மற்றும் அவரது பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனால் பெரும்பாலும் அந்த நாட்டில் குற்றமே நடப்பதில்லையாம்.
இப்படி பல சட்டங்களை இயற்றி வந்த வட கொரியா தற்பொழுது சிவப்பு வண்ண லிப்ஸ்டிக்கிற்கு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
சிவப்பு லிப்-ஸ்டிக் போட்டிருக்கும் பெண்கள் கவர்ச்சியாக இருப்பதாகவும், அதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செல்லக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு கருதுகிறது.
எனவே, சட்டத்தின்படி பெண்கள் குறைந்தபட்ச ஒப்பனை செய்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.வட கொரியாவின் தனிப்பட்ட தோற்றத்தின் மீதான கட்டுப்பாடு சிவப்பு லிப்-ஸ்டிக்கிற்கு அப்பாற்பட்டது.
இதற்கு முன்பு, முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல பொருட்களுக்க்கு கிம் ஜாங் உன் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, ஸ்கினி மற்றும் நீல நிற ஜீன்ஸ், உடலில் ஏதாவது குத்திக் கொள்வது, நீளமான முடி போன்ற சில சிகை அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிகை அலங்காரங்கள் செய்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் வடகொரியாவில் இந்த சட்டங்களை மீற முயற்சிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.