மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயற்சி செய்த நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக , இன்று டெல்லியில் ரூ 1250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை நோக்கி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயன்றனர். இதனிடையே, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட பிரச்சனையில், கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதனால், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைதி பேரணிக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி-ஹரியானா எல்லையிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, எத்தகைய தடைகள் வந்தாலும் எங்கள் அமைதி பேரணி தொடரும் என மல்யுத்த வீரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.