தமிழ்நாட்டில் இன்று 12 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் ( ug admissions ) கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7.72 லட்சம் மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் . தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .
Also Read : தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று காலை வெளியிட்டது
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ( ug courses ) இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.