திருப்பூர் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் கோயில் வழி பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் பின்புற கழுத்தில் சரமரியாக குத்தியுள்ளார். இதில் வலி தாங்காமல் அலறி துடித்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞன் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/11/image-245.png?resize=750%2C450&ssl=1)
மேலும் சாந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடன் பழகி வந்ததாகவும், சாந்தியின் சூழ்நிலையை அறிந்த கணேசன் சாந்திக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்ததாகவும், தற்பொழுது சாந்தி தன்னை விட்டு விட்டு வெளியில் வேறொருவரிடம் பழகுவதை அறிந்து, கத்தியால் குத்தியதாகவும் கூறினார்.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.