Annamalai :கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் செல்ல பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச்செல்லும் நோக்கில்,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை தொடங்கினார்.
இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். 2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர்,
3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்கி இருந்தார்.

அந்த வகையில் ,தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சென்றார்.
என் மண், என் மக்கள் நடைபயணம் நேற்று இரண்டாவது நாள நேற்று பி.பள்ளிபட்டி பகுதிக்கு வந்தடைந்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த லூர்து அன்னை கிறித்துவ தேவாலயத்திற்கு அண்ணாமலையை பாஜகவினர் அழைத்து சென்றனர்.
Also Read:https://itamiltv.com/ram-lalla-idol-s-jan-17-ayodhya-tour-cancelled-here-s-why/
இதைத் தொடர்ந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அவரை, அங்கிருந்த கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், உள்ளே வரக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து
முழக்கமிட்டனர்.
மேலும் அங்கிருந்தவர்கள் புனிதமான இடத்தில் நீங்கள் மாலை போடகூடாது என்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகவும் மணிப்பூரில் கிருத்துவ மக்களுக்கு அநீதி இழைத்த பாஜகவினர்,
எங்களது தேவாலயத்திற்குள் வர அருகதையில்லை எனவும் கூறினார். மேலும், அண்ணாமலையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1744670162677375239?s=20
மேலும், அந்த பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்து அண்ணாமலை மற்றும் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தினரை சமாதானம் செய்த காவல்துறையினர் அண்ணாமலையை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் செல்ல பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு (Annamalai) இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்பட்டுள்ளது.