சென்னை பூவிருந்தவல்லி அருகே ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடி வரை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் வினோத் . ஆன்லைன் ரேடிங் மீது அதீத ஆர்வம் கண்ட இவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து நீண்ட நாட்களாக ட்ரேடிங்கில் பணத்தை முதலீடு செய்து வந்த இவருக்கு தொடர் நஷ்டம் வந்ததாக கூறப்படுகிறது . இருப்பினும் எப்படியாவது விட்டதை பிடித்துவிடவேண்டும் என நினைத்த வினோத தெரிந்த அனைவரிடமும் படத்தை கடனாக பெற்று மீண்டும் மீண்டும் ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
Also Read : சென்னை மெரீனா கடற்கரை செல்வோர் கவனத்திற்கு – இன்று போக்குவரத்து மாற்றம்..!!
நாட்கள் பல கடந்தும் செய்த முதலீட்டில் எந்த லாபமும் இல்லாமல் நஷ்டம் மட்டுமே வந்துள்ளது . ஆன்லைன் ட்ரேடிங்கில் வினோத் 1 கோடி வரை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் நஷ்டம் மற்றும் கடன் சுமை அதிகமாக மன உளைச்சலில் இருந்த வினோத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோத்தின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வினோத்தின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.