Andhra Congress-ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, தனி கட்சியை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி எதிராக போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
Also Read :https://itamiltv.com/survey-at-mathura-shahi-eidgah-mosque-supreme-court-stays-allahabad-high-court/
அதன் பிறகு இரண்டாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார்.
அப்போதைய காலகட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் அவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா இணைந்து செயல்பட்டு வந்தார்.
ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனி கட்சியை தொடங்கினார்.
தெலங்கானாவில் கே.சி.ஆருக்கு எதிராக காங்கிரஸ் பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்ததை தொடர்ந்து,
தெலங்கானா தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1747199853401436475?s=20
இந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவராக பதவி வகித்து வந்த கிடுகு ருத்ர ராஜூ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராக ஒய்.எஸ். சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களில் ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களில் ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில்,ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ். சர்மிளாவுக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது முதலமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.