அடர்பனி : டெல்லியில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு குளிர் இருந்தது.
டெல்லியின் பாலம் பகுதியில் காலை 4.30 மணியளவில் தெளிவான பார்வை நிலையானது, பூஜ்யம் என்ற அளவில் இருந்தது. சப்தர்ஜங் பகுதியில் 200 மீட்டர் என்ற அளவில் வானிலை காணப்பட்டது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த அடர்பனி மூட்டம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது.
இதன்பின் காலை 8.30 மணியளவில் சப்தர்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் மற்றும் பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியசும் பதிவானது.
வெப்பநிலையை கணக்கிட்டால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பு இந்த சீசனில் 4 டிகிரி வரை சென்றிருக்கிறது. இருந்தாலும் அதிகபட்ச வெப்பநிலை நேற்று மிகக்குறைவாக இருந்தது.
குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக இருந்தபோது அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி வரை சென்றது. ஆனால் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 12.5 டிகிரிக்கு மேல் செல்லவில்லை.
குறைந்தபட்ச வெப்பநிலைக்கும், அதிகபட்ச வெப்பநிலைக்கும் இடையே 5 டிகிரி மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதனால் மக்கள் அதிகப்படியான குளிரை உணர்ந்தனர்.
மலை வாசஸ்தலங்களான சிம்லா, தர்மசாலாவில்கூட அதிகபட்ச வெப்பநிலை இவ்வளவு குறைவாக இல்லை.
பனிமூட்டத்தால், பார்வைத்திறன் குறைவாக இருப்பதால் அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை பயணம் செய்வதை தவிர்க்குமாறு நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது விபத்துக்களை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு, உத்தரபிரதேசத்தில் அடர்த்தியான மூடுபனி காணப்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, பேருந்துகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை அம்மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1743608962296283449?s=20
டெல்லியில் நேற்று காலையில் இருந்து மாலைவரை ஒருநேரம்கூட சூரியனை பார்க்க முடியவில்லை. அடர்பனி காரணமாக நாள் முழுவதும் இருண்ட வானிலையே காணப்பட்டது.
இதனால் இரவில் குளிர் மேலும் அதிகரித்து மக்கள் நடுநடுங்கிப் போனார்கள்.