அமெரிக்காவில் உள்ள 1100 கோடி மதிப்பிலான சிலைகள்..
அமெரிக்காவில் உள்ள சுமார் 1100 கோடி மதிப்பிலான சிலைகளை மீட்டுக் கொண்டு வருவதற்கு முக்கிய குற்றவாளியாக உள்ள ஆறு நபர்களை,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து கைது செய்தால் மட்டுமே சிலைகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முன்னாள் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில் சிற்பங்களை வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் திருடப்பட்டு வெளிநாட்டில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் திருடு போன சிலைகள் 2600 சிலைகள் அமெரிக்காவில் உள்ளதாக தெரியவந்தது.
சிலைகளை மீட்பது தொடர்பாக அந்நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டு சிலைகளை மீட்ககூடிய பணிகளை இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து செய்து வருகிறது.
அந்தவகையில் சிலைகளை மீட்பு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக உள்ள சுபாஷ் கபூர், சஞ்சீவி, வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ்,
மற்றும் மறைந்த தீனதயலன் ஆகியோரை கைது செய்து அமெரிக்காவை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. இதுதொடர்பாக 2021 ஆம் ஆண்டு சமனும் வழங்கப்பட்டது.
இன்நிலையில் தமிழக சிலை கடத்த தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றவாளியை பிடிப்பதில் காலதாமம் ஏற்படுவதாகவும்,
அதனால் சிலைகள் மீட்டுக் கொண்டுள்ளது சிரமம் உள்ளதாக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சுமார் 1100 கோடி மதிப்பிலான சிலைகள் உள்ளது அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து பலசிலைகள் அங்கு உள்ளது.
“பங்காளிகள் எங்களை பகையாளியாக நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல” – அண்ணாமலை
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜர் சிலை உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் அங்கு உள்ளது.
எனவே அது மீட்டுக் கொண்டு வருவதற்கான பணிகளை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சிலைகடத்தலில் முக்கிய குற்றவாளியாக உள்ள சுபாஷ் கபூர் சகோதரி சுஷ்மா செரிப்யிடம் 40க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதாகவும்,
எனவே அவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
காணாமல் போன சிலைகளை கண்டுபிடிப்பது தொடர்பாக புகார் பெறப்பட்ட உடனே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
சமீப காலத்தில் FIR பதிவு செய்வது குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உயர் அதிகாரிகள் நீதிமன்றம் சென்று முழுவிவரத்தையும் தெரிவித்தால் மட்டுமே,
சிலைகளை மீட்டுக்கொண்டு வருவதற்கு எளிமையாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.