வடசென்னை தொகுதி: தமிழகத்தில் வடசென்னை தொகுதி வாக்காளர்களிடம், வாக்களிப்பதற்கான உறுதி மொழி பெறுவதில் பெருநகர சென்னை மாநகராட்சி உலக சாதனை படைத்துள்ளது.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 4லட்சத்து 10ஆயிரத்து 988 வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியினை 12 மணி நேரத்திற்குள் பெருநகர சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது. இந்த நிகழ்வு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Elite World records) மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியினால் (India Records Academy) உலகசாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் Single Window System முறையில் மாணவர் சேர்க்கை!
உலக சாதனை நிகழ்த்தியதற்கான மேற்கோள் சான்றிதழ்கள் மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர். லலிதா, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார துணை ஆணையர் (சென்னை வடக்கு) கட்டா ரவி தேஜா, ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நடுவர் அர்ச்சனா ராஜேஷ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மூத்த ரெக்கார்ட்ஸ் மேலாளர் ஜெகந்தன் பழனிசாமி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பெருநகர சென்னைமாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.