உடல் எடையை ஆரோக்யமாக குறைக்க.. ஆயுர்வேத டிப்ஸ்…
1. எலுமிச்சை சாறு குடிப்பது செரிமான அமைப்பை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் எடை குறைக்கவும் உதவுகிறது.
வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து குடித்து வந்தால் கொழுப்பை எளிதில் உடைக்க உதவுகிறது. உங்களை உற்சாகமாகவும், இலகுவாகவும் உணர வைக்கிறது.
2.தினசரி 45-60 நிமிட உடற் பயிற்சி அல்லது யோகா செயல்பாடுகளை செய்ய வேண்டும். இது உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது.
3.குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது லைட் யோகா அல்லது தியானம் செய்வது மிகவும் முக்கியம். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இயற்கையாகவே உடல் எடையை குறைக்க உதவுகிறது. தியானம் உடல் எடையை குறைப்பதற்கான மிக முக்கியமான ஆயுர்வேத வழிகளில் ஒன்றாகும்.
4.இரவில் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை முற்றிலுமாக தவிர்த்தால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவது எளிதாக இருக்கும். இரவில் பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிடுவது சிறந்தது.
5.குளிர் காலத்தில் வேர் காய்கறிகள், விதைகள், கொட்டைகள், இறைச்சிகள் மற்றும் பாலாடைக்கட்டிகள் சாப்பிடலாம்.
இதையும் படிங்க : அர்ச்சனா பேசுற எல்லாமே பொய்- கடுப்பான ஆரி.. வைரல் ட்வீட்!
6.ஆரோக்கியமான உடல் எடை இழப்புக்கு, செரிமான செயல் முறையை துரிதப்படுத்த ஒவ்வொரு உணவிற்கும் பிறகு சிறிய நடைப்பயணங்களை மேற்கொள்வது அவசியம்.
7.பகலில் தூங்க கூடாது. இரவில் மட்டுமே தூங்க வேண்டும். இதனால் உடல் வளர்சிதை மாற்றம் சரியாக இயங்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
8.தினமும் காலை எழுந்தவுடன் மூச்சுப் பயிற்சியை 15 முறை செய்து பழக வேண்டும். இதனால், உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். உடலில் ரத்தம் தேக்கம் அடையாமல் சீராக உடல் முழுவதும் பாயும். உடல் தசை வலுபெற்று, கொழுப்பு கரையும்.
9.வயிற்றுப்பகுதி கொழுப்பை கரைக்க திரிபலாப் பொடியை முதுகு, வயிறு, மார்புப் பகுதியில், கீழிருந்து மேலாகத் தேய்த்து மசாஜ் செய்வதால், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரையும்.
10.எனிமா சிகிச்சை : ஆயுர்வேத மருத்துவ முறையில் யார் யாருக்கு எந்தெந்த வகை எனிமா சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவக்கு தெரியும்.
மருத்துவரின் பரிந்துரையின்படி குறிப்பிட்ட இடைவெளியில் எனிமா சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், மலக்குடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் சுத்தமாக வெளியேற்றப்படும் (ஆயுர்வேத டிப்ஸ்).