நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் பெயர் சூட்டி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் தோன்றி மக்கள் நலத்திட்ட உதவிகளையும், அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் ஊடாக நடிகர் விஜய் செய்யும் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அரசியல் கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் சென்னை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
https://x.com/ITamilTVNews/status/1753320549005382085?s=20
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதாகவும், இந்த கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் பெயர் சூட்டி உள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : dmk mps protest : பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – dmk mps போராட்டம் நடத்துவர்- முதல்வர் அதிரடி
மேலும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும்,
அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.