தமிழ்நாட்டில் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் பொறியியல் ( Engineering Application ) மாணவர் சேர்க்கைகாண விண்ணப்பப் பதிவு 7 நாட்களில் 1 லட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
தமிழ்நாட்டில் கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அன்றே அறிவிக்கப்பட்டது .
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7.72 லட்சம் மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் . தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த மே 6 ஆம் தேதி வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது .
ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ₹500; எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினருக்கு ₹250 பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் ( engineering admission ) உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது
இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது .
ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைகாண விண்ணப்பப் பதிவு ( Engineering Application ) 7 நாட்களில் 1 லட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .