Ukraine airstrike on Russia : உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்கள் 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில், நேற்று ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதையும் படிங்க : வாக்காளரை அறைந்த எம்.எல்.ஏ… திருப்பி அடித்த வாக்காளர் – வாக்குச்சாவடியில் பரபரப்பு!
இதனால் அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவம் நடந்த பகுதியில் மீட்புபணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி 15 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்ட சூழலில், அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர் (Ukraine airstrike on Russia).

இந்த சம்பவம் குறித்து பெல்கோரட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறுகையில்,
“இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் இறந்தனர்.
11-ம் தேதி தாக்குதலின்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேரை இழந்திருக்கிறோம்’ என்றார்.
மறுபக்கம், உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ரஷியப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையே, ரஷியாவின் தொடர் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறினார்.