கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக ( train service ) சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயிலின் விவரம் பின்வருமாறு :
வண்டி எண் 06037 சென்னை எழும்பூர் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில், மே 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28 மற்றும் ஜூன் 30ம் தேதிகளில் இரவு 11.50க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
Also Read : மக்களவை தேர்தல் : ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு..!!
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06038 வேளாங்கண்ணி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், மே 18, 20, 25, 27, ஜூன் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் பிற்பகல் 2.45க்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11.30க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
இந்த ரயிலில் 2 மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டி, ( train service ) 10 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.