மின்னல் தாக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.பீகாரில் கடந்த சில வாரங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின .
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பொது மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட மீட்புக்குழுவினர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் மின்னல் தாக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 10 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் பேரிடர் மேலாண் கழகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மோசமான வானிலையின் போது பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.