இந்தியாவில் 4 வாகனங்களை விற்பனை செய்து வருகிறது லம்போர் கினி வாகனம் நிறுவனம்.மேலும் இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு லம்போர் கினி வாகனத்தின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்கள் லம்போர் கினி வாகனங்களில் மாறுபட்ட தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு இருக்கும்.இவ்வகை வாகனங்கள் பயன்படுத்துபவர்கள் குறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் ,தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவில் லம்போர் கினி வகை சொகுசு வாகனங்களை வைத்திருப்பவர்கள் ஒன்றிணைந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்குச் சுற்றுலவந்தனர்.13 வாகனங்கள் காவல்துறையினரின் உதவியுடன் சென்னையிலிருந்து ஈசிஆர் சாலை மார்க்கமாக மாமல்லபுரத்திற்கு அணிவகுத்து வந்தன.
சாலை நெடுகிலும் அவற்றைக் கண்டு ரசித்த பொதுமக்கள் தம்படம் மற்றும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.லம்போர் கினி வகை வாகனங்கள் வினாடிக்கு 100 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த வாகனங்களின் ஆரம்ப விலை 3 கோடி ரூபாயிலிருந்து வாகனத்தின் நிறத்திற்கு ஏற்ப விலை நிர்ணிக்கியப்பட்டுள்ளது