கோவையில் மீண்டும் கொடுமை.. – 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..!

கோவை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சின்மயா பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக, அம்மாணவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி நீங்காத நிலையில், மீண்டும் அந்த மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 10 ஆம் வகுப்பு திருமணம் செய்துகொள்வதாக கூறி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் ஒருவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருவது அம்மாவட்டத்தில் பெரும் சர்ச்சையையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts