சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மண்டல தலைவர் வேலு தலைமையில்நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட உரையை சங்க மாநில பொது செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் வழங்கினர். இதில்
மண்டல செயலாளர் ராசப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்து கழக கரூர் மற்றும் திருச்சி பொதுசெயலாளர் கருணாநிதி, மண்டல பொருளாளர் கருணாகரன்உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வசம் உள்ள அமுதம் ரேஷன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றக்கூடாது.
ஒப்பந்தப்படி 2012ஆம் ஆண்டு பருவகால பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தொழிலாளர் ஆணையரின் ( சமரசம்) உத்தரவின்படி இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியர்களை காலதாமதம் செய்யாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இண்டேன் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிலிண்டர் ஒன்றிற்கு கூலியாக ரூ 1.50 வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் சப்ளை செய்ய அனுமதித்துள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.
கணினி பிரிவு ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷங்களை எழுப்பினர்.