திருவண்ணாமலை தீப விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 116 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி , வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர் .
அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் தீப விழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த மாதத்தில் மட்டும் பலலட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து தரிசனம் செய்வர்.
Also Read : ஒரே நாளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா..?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி பொதுமக்கள் வசதிக்காக 116 இடங்களில் கார் பார்க்கிங் வசதி அமைத்தும் . நிர்ணயிக்கப்பட்ட கார் பார்க்கிங்கில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கார் பார்க்கிங் இடங்கள் குறித்த தகவல்களை 93636 22330 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.