மதுரை அருகே அரசு பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் – வீரம்மாள் தம்பதியவரின் அன்பு மகள் ஆனந்தி . இவர் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
Also Read : எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார்..!!
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற ஆனந்தி பள்ளி வளாகத்தில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். ஆனந்தி மயங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு ஆனந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டனர் . பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்புமகள் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து ஓடி வந்த அவரது பெற்றோர் மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் பார்ப்போரை கலங்கடித்துள்ளது.