நாமக்கல் அருகே ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார். இவரின் மனைவி மற்றும் மகள் கலையரசி, மைத்துனர் ஆகிய நான்கு பேர் பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உனகவம் ஒன்றில் சவர்மா பார்சல் வாங்கியுள்ளனர்.
இதே போல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் தனது நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுக்க அதே உணவகத்தில் நிறைய சவர்மா வாங்கியதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் அந்த சவர்மாவை சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது .இதை அடுத்து கல்லூரி விடுதி ஊழியர்கள் மாணவர்களை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர் .
இந்நிலையில் இதே உணவகத்தில் சவர்மா பார்சல் வாங்கி சாப்பிட்ட தவக்குமாரின் 14 வயது மகள் கலையரசி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளனர் . கலையரசி மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறிது நேரம் உடல் நிலை சீராக காணப்பட்ட கலையரசிக்கு மீண்டும் வாந்தி , மயக்கம் ஏற்பட அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .
தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கலையரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதையடுத்து அந்த உணவாக உரிமையாளர் மேல் வழக்கு பதிந்துள்ளார் போலீசார் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அந்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
நாமக்கல் அருகே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி கலையரசி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .