செல்போனால் நிகழ்ந்த விபரீதம் – மாணவன் பலி!

18-year-old-boy-dies-as-mobile-explodes-while-charging
18 year old boydies as mobile explodes while charging

கோவை அருகே செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 18 வயது கல்லூரி மாணவர் சிவராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம். 18 வயதான சிவராம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.

கடந்த 9-ம் தேதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போனை பயன்படுத்திய சிவராம் பின்னர் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கி உள்ளார்.

18-year-old-boy-dies-as-mobile-explodes-while-charging
18 year old boy dies as mobile explodes while charging

மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ, சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது.இதில் சிவராம் உடலில் பல்வேறு பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து மதுக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts