மது மற்றும் அசைவ பிரியர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமின் தேதியை மாற்றியிருக்கிறது மாநில மருத்துவத்துறை. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 5 வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு பதில் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு (24ம் தேதி) பதில் சனிக்கிழமை (23ம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 50 ஆயிரம் முகாம்களில் 6ம் கட்டமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும்.
அசைவம் எடுத்துக் கொண்டாலோ, மது அருந்தியிருந்தாலோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடாது என்ற வதந்தியை மக்கள் நம்புவதால், அசைவம் மற்றும் மதுப் பிரியர்களுக்காக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.