இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் சுமார் ஆயிரத்து நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இதற்க்கு மத்திய அரசு நிராகரித்தது.
இதனையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் அறிவித்துள்ளது.