தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலையில் அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபவுசி, தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய அமெரிக்கர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும்,. நவம்பர் 22ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29ம் தேதி தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கூறிய அவர் ஒமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அமெரிக்க இளைஞருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அமெரிக்கர்கள் விரைவில் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஃபவுசி அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய அனைவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசை முறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.