ராசிபுரம் அருகே 2 சகோதரிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துவந்த 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவருடன் வேலை செய்யும் ஜெயா என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வீட்டில் தங்கவேலும், ஜெயாவும் தகாத உறவில் ஈடுபட்டதை ஜெயாவின் மகள்களான 2 சிறுமிகள் வீடியோ எடுத்து நாமக்கல் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி தங்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குழந்தைகள் நல அலுவலர் செளண்டேஸ்வரி ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து,விசாரணை நடத்திய காவல்துறையினர் தங்கவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.