உலகின் 23 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் சீன உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரசின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பதிவான நாடுகளுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வருவதோடு, வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் சூழல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், உலகில் 23 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.