ஸ்காட்லாந்த் Scotland forest : லின் ஆப் டம்மெல் வனப்பகுதியில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் லின் ஆப் டம்மெல் வனப்பகுதி ஒன்று உள்ளது Scotland forest.
இங்கு பலரும் ட்ரக்கிங் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பயணிகளுகாண நல்ல அவென்ஜ்ர்ரஸ் தளமாகவும் இவ்விடம் உள்ளது.
இங்கு அருவிகள் இருப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து அருவிகளில் குளித்து நேரத்தை செலவிடுவார்.
இதையும் படிங்க : 270 முறை விதிமீறல்! 1.36 லட்சம் அபராதம்!
பெரும்பான்மையான மக்களுக்கு பொழுதுபோக்கு தளமாக இருக்கும் இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் சில நபர்கள் தங்களது பொழுதை கழிக்க சென்றிருந்தனர்.
அவர்கள் அங்கிருந்த அருவியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 நபர்கள் கால் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர்.
என்ன செய்வது என்று தடுமாறிய அங்கிருந்த மற்றவர்கள் சம்பவம் பற்றிய தகவலை போலிஸாருக்கு தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி தகவல் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரின் உதவியுடன் 2 மாணவர்களையும் சடலமாக மீட்டனர்.
மேலும் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களது படிப்பிற்காக ஸ்கோட்லாண்ட் வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்களின் உரிழப்பு பற்றிய தகவல்கள் இந்திய தூதரகம் மற்றும் டண்டீ பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இந்திய தூதரகம் மூலம் மாணவர்களின் மறைவு அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், மாணவர்களின் உடல்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : அடேங்கப்பா.. தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட அதிகம் பேர் சொந்த ஊர் பயணமா..!