Violation 270 times! 1.36 lakh fine : கர்நாடக மாநிலம், பெங்களூரு பானஸ்வாடியை சேர்ந்த பெண் ஒருவர், காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
பொதுவாக வாகனம் ஊட்டும் போது சில விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும். இது வாகன ஓட்டிகளுக்கு மற்றும் ஓட்டிகளால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும்.
உதாரணமாக ஹெல்மெட் அணிவது, செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது, சிக்னலை மதிப்பது. சீட்பெல்ட் அணிவது, வேகக்கட்டுப்பாடு கருவியை பயன்படுத்துவது, ஸ்பீட் பிரேக்கரில் மெதுவாக செல்வது, வளைவுகளில் வேகத்தை குறைப்பது,
ஸ்கூல்/காலேஜ் பகுதிகளில் மெதுவாக செல்வது, போன்ற விதிமுறைகள் வாகன ஓட்டிகள் கட்டாயம் பின்பற்ற போக்குவரத்து துறையால் அறிவுறுத்தப்பட்டுத்தது.
சில நாட்களுக்கு முன், தலை கவசம் அணியாமல் சென்றதற்காக போலீஸாரிடம் பிடிபட்டர். அதற்காக அவர் வண்டி நம்பரை நோட் செய்து பைன் போட்ட போக்குவரத்து போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க : கிளைசீமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாக இருக்கும் பழங்கள்! யாருக்குக்கு நல்லது?
போலீசார் போட்ட அபராதத்தில் பில் தொகை ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று இருந்தது.
டெக்னிக்கள் குறைபாடாக இருக்கும் என முதலில் நினைத்த போலீஸார் எதற்கும் CCTV கேமெராக்களை பார்வையிட முடிவு செய்தனர்.
ஆனால், பானஸ்வாடியை சேர்ந்த இந்த பெண், ஹெல்மெட் அணியாமல் செல்வது, விதிகளை மீறி அதிக ஆட்களை பைக்கில் ஏற்றி செல்வது, போனில் பேசிக்கொண்டே செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, மேலும் தவறான ரூட்டில் (one way) செல்வதுஎன்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.
முழுமையாக சோதித்ததில் இந்த பெண் அதுவரை கிட்டத்தட்ட பல முறை போக்குவரத்து விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டது.
இவை அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமெராக்களில் பதிவாகியுள்ளது Violation 270 times! 1.36 lakh fine.
இதனை விசாரித்த அப்பகுதி போக்குவரத்து துறையினர், அந்த பெண் 270 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதை உறுதி செய்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சாலை விதிகளை மீறியதற்காக ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
மேலும் அவரது வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர் போக்குவரத்து போலீசார்.
இதையும் படிங்க : ஏகனாபுரத்தில் 21 வாக்குகள் மட்டுமே பதிவு