இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்ல என அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிலையில் ,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள செய்தியாளர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவரும் வழக்கறிஞருமான சத்தியசீலன் பேசுகையில்
தென்னிந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்ஹெல்மட் அணியாவிட்டால் ரூபாய் 2,000 அபராதம் என்ற அரசு மற்றும் காவல்துறையின் ஆணையை திரும்பப் பெறவேண்டும் இந்த அபராதம் ஏற்கத்தக்கதல்ல.
இது சாமானிய மக்களை பாதிக்கும் ஏனென்றால் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வரும் போது அவசரத்திற்கு பின்னால் ஒருவரை ஏற்றி வந்தால் அவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றால் அது எந்த வகையில் ஏற்க தக்கதாகும் இது போன்ற பல கேள்விகளை எழுப்பினார்.
மேலும் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் திறந்தவெளியில் நேர்மையான முறையில் நீதிபதிகள் நியமனத்தை நடத்திட வேண்டும் எனவும்தமிழகத்தில் காவல்துறை நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது.
போர்வையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது ஏனென்றால் சென்னை மதுரை உள்ளிட்ட நகரங்களில் தினந்தோறும் கொலை கொள்ளை போதை மருந்துகளை கண்டுபிடிப்பது போதைப் பொருள்களை கண்டு பிடிப்பது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது ஆகவே சட்டம்-ஒழுங்கை தமிழக அரசு பேணிக்காக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தி உள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்த போதிலும் நலிந்த வயதான வழக்கறிஞர்கள் உயிருடன் இருக்கும் போதே அந்த சேமநல நிதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்