மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 28)
மேஷம் :
இன்று தொடங்கும் காரியங்கள் சாதகமாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : கருப்பு.
ரிஷபம் :
நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : சிவப்பு
மிதுனம் :
உற்சாகம் பெருக்கெடுக்கும் நாள். எதிலும் துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் பெருகும்.
சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : நீலம்
கடகம் :
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பணிச்சுமை ஏற்படக் கூடும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : மஞ்சள்
இலங்கை தமிழர் சாந்தன் உறவுகளை காணாமல் உயிரிழந்த சோகம்!
சிம்மம் :
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : பச்சை
கன்னி :
உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். மகாலட்சுமி வழிபாடு நன்று.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : ஊதா
துலாம் :
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்களுடன் வீண் விவாதம் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : செம்மஞ்சள்
விருச்சிகம் :
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.
ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு :
திடீர் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
அம்பிகையை வழிபட சிரமங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : கரும்பச்சை
மகரம் :
குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும்.
மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி பெருகும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : சிவப்பு
கும்பம் :
இன்று முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : சாம்பல் நிறம்
மீனம் :
வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம். வியாபாரத்தில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
துர்க்கையை வழிபட நன்மைகள் ஏற்படும். (2024 February 28).
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : கடல் நீலம்