காஞ்சிபுரத்தில் திருமுடிவாக்கம் பகுதியின் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து 21 வீடுகள் தீயில் எரிந்து (houses burnt) நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் ராஜாராம் என்பவரின் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தபோது வீட்டிலிருந்த சிலிண்டரும் திடீரென வெடித்து சிதறி அருகிலிருந்த குடிசைகள் (houses burnt) மீது விழுந்துள்ளது.
இதனால், அந்த பகுதியில் இருந்த 21 குடிசைகளில் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறி உள்ளது.21 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் அன்பரசன் மற்றும் எம்எல்ஏ செல்வபெருந்தகை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளனர். மேலும், வருவாய்த்துறையினர் விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து 21 குடிசைகள் தீப்பற்றி எரிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.