சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளின் பிரிவுகள் அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளனர் விஷ்ணுகாந்த – சம்யுக்தா (Samyukta) தம்பதி. ஒரே சீரியலில் பார்த்து, பேசி, பழகி, காதல் செய்து, திருமணம் செய்து கொண்டவர்கள் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், தற்போது அவர்கள் கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். சுமார் 15 நாட்களாக பிரிந்து வாழும் இவர்கள் தங்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து முதல்முறையாக விஷ்ணுகாந்த் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் “எங்களுடைய பிரச்சனைக்கு காரணமே சம்யுக்தாவின் அப்பாதான்.. அவர் எங்களுடைய திருமணத்திற்கு முன்பு குடும்பத்தோடு சேராமல் இருந்தார். சம்யுக்தாவை (Samyukta) நான் காதலித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார் என்று கூறியிருந்தார். ஆனால், எங்களுடைய திருமணத்தின் போது தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து சேர தொடங்கினார்.
பிறகு எங்களுடைய திருமணத்திற்கு பிறகு எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். காலையில் சாப்பாடு கொண்டு வருவதற்காக ஒரு முறையும் மாலையில் அந்த சாப்பாடு பாத்திரத்தை எடுப்பதற்காக ஒரு முறையும் வருகிறார். எங்களுடைய பிரச்சனைகளுக்குள் அவர் தலையிடுவதால் எங்களுடைய பிரச்சனையும் பெரியதாகிறது. ப்ரைவேசியும் போய்விடுகிறது. அதனால் நான் அவர் எதற்காக வருகிறார் இப்படி வருவதால் நமக்கு பிரைவேசி இல்லையே என்று சொன்னேன் அதிலும் பிரச்சனை தொடங்கியது.
அதுபோல சம்யுக்தா அவருடைய பெண் தோழி ஒருவரோடு அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி ஏற்கனவே பல விஷயங்களை சம்யுக்தா என்னிடம் கூறியிருக்கிறார். நாங்கள் காதலிக்கும் காலத்தில் எங்களைப் பற்றி அந்த தோழி தவறாக பேசியவர். அதனால் அவரோடு எதற்காக ரொம்ப பேசுற என்று கேட்டேன். அவர் நான் அப்படித்தான் பேசுவேன் என்றார். அவர் முக்கியமா நான் முக்கியமா என்று கேட்டதற்கு என்னுடைய தோழி தான் முக்கியம் என்று கூறிவிட்டார். அப்படித்தான் எங்களுடைய பிரச்சனை ஏற்பட்டது அதனால் தான் கடைசியாக அவர் பிரிந்து சென்றார். திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் எங்களுக்கு பல பிரச்சனைகளும் வந்தது. திருமணத்திற்கு முன்பு 8 மாதங்கள் காதலித்தோம் அப்ப எல்லாம் இல்லாத பிரச்சனைகளும் இந்த 15 நாட்களுக்குள் ஏற்பட்டதனால் தனித்தனியாக இருக்கிறோம்.
ஆனால் நான் பலமுறை சம்யுக்தாவோடு பேசுவதற்கு முயற்சி செய்தேன். அதற்கு அவர்தான் இடம் கொடுக்கவில்லை. மாறாக என்னைப்பற்றி சமூக வலைத்தளத்தில் கேப்ஷன் கொடுப்பதால் பலர் தப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் சம்யுக்தாவை அடித்து துன்புறுத்தவும் இல்லை. அவரை கட்டுப்படுத்தவும் இல்லை. ஆனால் என்னை பற்றி பல youtube சேனல்களிலும், செய்திகளிலும் தவறாக சித்தரிக்கிறார்கள். அதற்காகத்தான் விளக்கம் கொடுப்பதற்காக நான் இப்போது பேசி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
ஒருபுறம் விஷ்ணுகாந்த் இப்படியான விளக்கதை கொடுத்துள்ள நிலையில், இதையடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் Live-ல் இவ்விவகாரம் குறித்து அழுதுகொண்டே பேசியிருந்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். அவருடைய பதிவில், “
விஷ்ணுகாந்தத்தை விட நான் 10 வயது இளைய பெண் எனவும், எனக்கு இப்பொது 22 வயதுதான் ஆகிறது. ஆனால், அவருக்கு 32 வயதாகிறது. அதை பொருட்படுத்தாமல் அவர் மீது இருந்த காதலாலும், அவரின் குண நலன்கள் பிடித்ததாலும் தான் அவரை திருமணம் செய்ய சம்மதித்தேன். என் வயதை பொருட்படுத்தாமல் 24 மணிநேரமும் செக்ஸ்சுவல் ரிலேஷன்ஷிபிலேயே இருக்க வற்புறுத்தினார். எங்களோட திருமணத்திற்கு 10,00,000 வரை செலவு செய்ததா சொல்றதெல்லாம் சுத்த பொய். திருமணம் ஒரு சாதாரண ஆத்தங்கரை பிள்ளையார் கோவிலில் தான் நடந்தது. ரிசப்ஷன் கூட கவர்மெண்ட் மண்டபத்துலதான் நடந்தது. திமணத்துக்கு நான் போட்டுருந்த டிரஸ், நகை எல்லாம் கொலாப்ரேஷன்ல பண்ணுனது. திருமணத்துக்கு பிறகு வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் என்னுடைய பணத்தில் தான் வாங்கி வைத்துள்ளேன்.
” என்று கூறியுள்ளார்.
தங்களின் காதல் விவகாரத்தை மகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் தங்களது ரசிகர்களோடு பகிர்ந்து கொண்ட ஜோடி இன்று தங்களது பிரிவிற்கான காரணத்தையும், அதன் சோகத்தையும் ரசிகர்களோடே பகிர்ந்து கொள்கின்றனர். திருமணமான ஒரு மாதத்திற்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு நட்சத்திர தம்பதி பிரிந்துள்ளது ஒருபுறம் அவர்களுக்கு நெருங்கிய நட்சத்திரங்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் அவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்தியதன் மூலம் நெட்டிசன்கள் இடையே பேசுபொருளும் ஆகியுள்ளது.