captain -வரும் 24ஆம் தேதி அதாவது நாளை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவு:
நடிகர் சங்க முன்னாள் தலைவரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 24ஆம் தேதி அதாவது நாளை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்..
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :http://Ayodhya-”திடீரென கோயிலை வட்டமிட்ட கருடன்..”’அயோத்தியில் நிகழ்ந்த அதிசயம்..!
நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவேந்தல்:
முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர்.
திரைத்துறை சார்பிலும் பல்வேறு முக்கிய நபர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன், கண்ணீர் மல்க பேசியது சுற்றியிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சில நிமிடங்கள் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749714917035499701?s=20
அவர் தனது பேச்சின்போது, “ எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை.
எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப் போனது மனதுக்கு கஷ்டமா இருக்கு.
கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை.
டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், “
இந்த கேப்டன் (captain)விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்” என்பதை கூறி விடை பெறுகிறேன் என்று தெரிவித்தது அனைவரின் மத்தியிலும் மனம் உருக செய்தது.