ஏர் இந்தியா ஊழியர்கள் ஒரேநாளில் மொத்தமாக விடுப்பு எடுத்த காரணத்தால் கடந்த 2 நாட்களில் ( air india ) 86 விமான சேவைகள் ரத்தான நிலையில் 25 பணியாளர்களை பணி நீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது .
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் விடுப்பால் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளன. மேலும் முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டினர் .
பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யபட்டது
Also Read : தோல் நிறத்தை வைத்து பேசுவதை பொறுக்க முடியாது – பிரதமர் மோடி கண்டனம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் நேற்று உறுதியளித்தது.
இந்நிலையில் ஏர் இந்தியா ஊழியர்கள் ஒரேநாளில் மொத்தமாக விடுப்பு எடுத்த காரணத்தால் கடந்த 2 நாட்களில் 86 விமான சேவைகள் ரத்தான நிலையில் 25 பணியாளர்களை பணி நீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது .
வேலைக்கு செல்லத் தவறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
இடையூறுகளைத் தவிர்க்க அடுத்த சில நாட்களுக்கு குறைவான விமானங்களை இயக்க உள்ளதாகவும் ( air india ) ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.