சென்னை எழும்பூர் – விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் உட்பட 28 சிறப்பு ரயில்கள் ரத்து ( special trains canceled ) செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது .
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சென்னை எழும்பூர் – விசாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (08578), விசாகப்பட்டினம் – சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (08577), தாம்பரம் – ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (06065), தன்பாத் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06066), தாம்பரம் – பீகார் மாநிலம் பாரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06061)
பாரெளனி- தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06062), தாம்பரம் – மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06089), சந்திரகாச்சி – தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06090), ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட இருக்கின்றன.
Also Read : ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு..!!
மேலும், சென்னை எழும்பூர் – சந்திரகாச்சிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06079), சந்திரகாச்சி – சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06080) உட்பட 28 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்த ரயில்கள் ஜூன் 16-ம் தேதி முதல் படிப்படியாக ரத்துசெய்யப்பட உள்ளன. அடுத்த ( special trains ) canceled அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.