மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று உரிய பாதுகாப்புடன் ( 2nd phase polling ) தொடக்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்நிலையில் 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் தொடங்கியுக்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த 2ஆம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது
இன்று நடைபெறும் இந்த தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 15.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் :
கேரளா – 20 தொகுதிகள்
கர்நாடகா 14 தொகுதிகள்
ராஜஸ்தான் 13 தொகுதிகள்
மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள்
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள்
அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள்
சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள்
ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது