கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் உள்ள நெல்லிக்குப்பத்தில் தாய், மகன், பேரன் என மூன்று பேர் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் காராமணி குப்பம் பகுதியில் வசித்து வந்த நிலையில் மூவரும் வீட்டுக்குள் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளனர் .
Also Read : அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ள முதல் நகரமாக பாலிதானா அறிவிப்பு..!!
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெளியே பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து சென்று பார்த்தபோது ஒவ்வொரு அறையிலும் ஒருவர் என மூன்று அறைகளில் மூவரும் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மூன்று பேர் மரணத்திற்கு காரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.