3 மாத பேரக்குழந்தையை கொலை செய்த பாட்டி – போலிஸ் வலைவீச்சு

குழந்தையின் பாட்டியே குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்நதவர் பாஸ்கரன். பொறியாளரான இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், ஆரியன் என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

தற்போது இந்த குழந்தைகளுக்கு மூன்று மாதங்களான நிலையில், மதுரையில் இருந்து பாஸ்கரன் வீட்டிற்கு வந்த ஐஸ்வரியாவின் தாயார், கடந்த 2மாதங்களாக தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வரியா கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த ஐஸ்வரியாவின் தாய், குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வரியா வீட்டுக்குள் தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் காயங்களுடன் கிடந்துள்ளது. பெண் குழந்தை வீட்டில் கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் அழுக்கு துணியால் மூடப்பட்டு இருந்துள்ளனது.

3-month-old-infant-brutally-murdered-in-coimbatore
3 month old infant brutally murdered in coimbatore

இதனையடுத்து பாட்டி சாந்தி வீட்டில் இருந்து தப்பி ஓட்டியுள்ளார்.
இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததொடு, இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பேரக்குழந்தையை கொன்றுவிட்டு பேத்தியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பி ஓடிய பாட்டி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
போலிசாரின் முதல் கட்ட விசாரணையில் சாந்திக்கு 15 ஆண்டுகளாக மனரீதியான பாதிப்புடன் இருந்து வந்துள்ளார் தெரியவந்துள்ளது.
குழந்தையின் பாட்டியே குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

Total
0
Shares
Related Posts