மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த முன்று பேர் முயல் வேட்டைக்கு செல்லும் போது மின் வேலியை மிதித்து உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்ற அய்யங்காளை ( 52) இவருடைய மகன்கள் அஜித் (25) இராணுவ வீரர். சுகந்திரபாண்டி( 23) இளைய மகன். இவர்கள் முன்று பேரும் சிவகங்கை மாவட்ட எல்லை மாரனாடு கிராமம் அருகே வயல் வெளி பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர்.
அப்போது பன்றிக்கு வைத்த மின் கம்பியை மிதித்ததில் முவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் முகவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி போலிசார் 3 பேரின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் இராணுவ வீரர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு இராணுவத்தில் பணியாற்றி விடுமுறைக்கு சொந்த ஊர் வந்ததுள்ளார். ராணுவ வீரரான அஜித்துக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மனைவி இருந்து வருகிறார். இவர்களுக்கு 15 தினங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.