நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சகோதரனை 30 மணிநேரம் அணைத்த படி (hugged her brother) காப்பாற்றிய சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரமான காசியான்டெப் பில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.
மேலும், இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.
காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. குறிப்பாக நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.
இந்த நிலையில், நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்ட சிறுமி ஒருவர், 30 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிறுவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கிய நிலையில், மரியம் என்ற அந்த 7 வயது சிறுமியும், அவரது சகோதரனும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டதை அடுத்து இருவரும் நகர முடியாமல் கிடக்கின்றனர்.
அந்த நிலையிலும், தன் சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை கொண்டு சிறுமி போர்த்தியபடி சிறுமி அரவணைத்துள்ளார் (hugged her brother).
இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தற்போது, இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
While under the rubble of her collapsed home this beautiful 7yr old Syrian girl has her hand over her little brothers head to protect him.
Brave soul
They both made it out ok. pic.twitter.com/GrffWBGd1C— Vlogging NW Syria (@timtams83) February 7, 2023