வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை. இன்று காலை வழக்கம் போல கடையை திறந்த போது, ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
புகாரை அடுத்து சம்பவ இடத்தற்கு வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 3 அடுக்கு மாடி கொண்ட இந்தக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்ட மர்மநபர்கள் காட்சிக்காக ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த நகைகள் மட்டும் தப்பியுள்ளன.
வழக்கமாக தினமும் விற்பனையை முடித்த பிறகு நகைகளை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு செல்லும் நேற்று இரவு அவ்வாறு செய்யாமல் ஷோகேஸிலேயே வைத்துச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் கடை ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகாதபடி மறைத்துவிட்டு லாவகமாக கொள்ளையர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.