விடாமல் துரத்திய கடன் தொல்லையால் சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் பாலமுருகன் (52), அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் (19), லிங்கேஷ்குமார் (17) ஆகியோர் வாழ்ந்து வந்துள்ளனர்.
நன்கு படித்து நல்ல வேலையில் இருந்து வந்த இவர்கள் தேவைக்காக 5 கோடி ருபாய் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நாளுக்கு நாள் கடனின் வட்டி தொகை அதிகரிக்க ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் பாலமுருகன் மற்றும் சுமதி திணறி வந்துள்ளனர்.
Also Read : விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ பட டீசர் வெளியானது..!!
நாளுக்கு நாள் கடனின் தொல்லை மனஉளைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில் பாலமுருகன் மற்றும் சுமதி தங்களது இரு மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நான்கு பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினற்னர்.