திருவண்ணாமலையில் முக்தி அடையப்போவதாக கூறி 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த மகாகால வியாசர், அவரது மனைவி ருக்மணி, மகள் ஜலந்தரி(17), மகன் முகுந்த் ஆகாஷ் குமார் (15) ஆகியோர் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இன்று தற்கொலை செய்துள்ளனர்.
Also Read : சலசலப்பில் பாமக – ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார்..?
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் சடலங்களை மீது உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதையடுத்து அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்ததில் அவர்கள் எழுதிவைத்த கடிதம் மற்றும் வீடியோ பதிவு கிடைத்துள்ளதாகவும் அதில் அவர்கள் முக்தி அடையப்போவதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.