கடலூர் எம்.புதூர் பகுதியில் நாட்டு வெடி மற்றும் வானவெடி தயார் செய்யும் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. இதில் இன்று காலை 7 பேர் பணிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு குடோனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூன்று நபர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எலும்பு திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.